சிக்கல்களில் நிழல் பந்தல்
சென்னையில் 8 போக்குவரத்து சிக்னலை வாகன ஓட்டிகளுக்காக நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Update: 2024-05-10 01:22 GMT
கோடை வெயிலின் தாக்கத்தினை முன்னிட்டு, போக்குவரத்து சிக்னல் பகுதிகளில் வாகன ஓட்டிகளின் நலனுக்காக முதற்கட்டமாக 8 போக்குவரத்து சிக்னல் பகுதிகளில் நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூடுதல் தலைமைச் செயலரும் சென்னை மாநகராட்சி ஆணையாளருமான ஜெ. ராதாகிருஷ்ணன் ரிப்பன் கட்டட சந்திப்பு, ராஜா முத்தையா சாலை சிக்னலில் அமைக்கப்பட்டுள்ள நிழல் பந்தலினை பார்வையிட்டு வாகன ஓட்டிகளுடன் கலந்துரையாடினார்.