டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் !!
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதிகள், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினர். தேர்தல் பிரசாரம் செய்வதற்காக இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.
இடைக்கால ஜாமீன் காலம் முடிவடைந்த உடன், ஜூன் 1-ந் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைந்துமீண்டும் சிறைக்குப் போக வேண்டும் என்பது ஜாமீன் உத்தரவு. அதேநேரத்தில் தமக்கான இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏற்கனவே அவசரமாக விசாரிக்க மறுத்திருந்தனர்.
இந்த நிலையில் இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரிய அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.