கடையில் பெட்ரோல் விற்ற வாலிபர் கைது!
வேலூரில் பெட்டிக்கடையில் பெட்ரோல் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.;
Update: 2024-04-30 06:33 GMT
பட்டா கத்தி வைத்திருந்தவர் கைது
வேலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சலவன்பேட்டை அருகே உள்ள ஒரு கடையில் வாலிபர் ஒருவர் பெட்ரோல் விற்றுக்கொண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் வேலூர் சலவன்பேட்டை பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 29) என்பது தெரியவந்தது. பின்னர், அவரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.