தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் போல் எதிர்காலத்தில் நடைபெறாது

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் போல் எதிர்காலத்தில் நடைபெறாது என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொண்டுள்ளது உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

Update: 2024-03-21 12:22 GMT

கோப்பு படம் 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் அறிக்கை தாக்கல் செய்ய தொடர்ந்து காவல்துறை தரப்பில் நேரம் கேட்கப்படுகிறது என்றும் மனுதாரர் தரப்பு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேருக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து வசூலிக்காதது ஏன் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் போன்று எதிர்காலங்களில் நடைபெற கூடாது என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொண்டுள்ளது என நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அமர்வு குறிப்பிட்டுள்ளது.

Tags:    

Similar News