ஆன்லைனில் பணத்தை இழந்த வாலிபர் - போலீசார் விசாரணை

ஆன்லைனில் லிங்க் மூலம் 65 ஆயிரம் ரூபாய் பணத்தை வாலிபர் செலுத்தி ஏமாந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2024-04-24 16:39 GMT

ஆன்லைனில் பணத்தை இழந்த வாலிபர் 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபர் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது வங்கிக்கணக்குக்கு ரூ.4 ஆயிரத்தை மர்மநபர்கள் அனுப்பி உள்ளனர். பின்னர் அவரை தொடர்ப்பு கொண்ட மர்மநபர்கள் நாங்கள் தெரியாமல் பணத்தை அனுப்பி விட்டோம். அதை திரும்ப அனுப்புங்கள் என்று கேட்டுள்ளனர். அவரும் அந்த பணத்தை அவர்களுக்கு அனுப்ப முடிவு செய்தார். மேலும் மர்ம நபர்கள் டெலிகிராமில் ஒரு லிங்க் அனுப்பி அதன்மூலம் பணத்தை அனுப்பக்கூறி உள்ளனர்.

Advertisement

அதை நம்பிய அந்த வாலிபர் லிங்கில் சென்று பணத்தை அனுப்பினார். தொடர்ந்து அவரிடம் பேசிய மர்மநபர்கள் ஆன்லைன் முதலீட்டில் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி அவரிடம் இருந்து ரூ.65 ஆயிரத்தை முதலீடு செய்ய வைத்துள்ளனர். பின்னர் அந்த பணத்தை அந்த வாலிபரால் பெற முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News