பூட்டை உடைத்து கை பணம் லேப்டாப் திருட்டு - மர்ம நபர்கள் அட்டகாசம்
பெயிண்ட் கடை ஊழியர் வீட்டில் நகை, பணம், லேப்டாப் திருட்டு பூட்டை உடைத்து மர்ம நபர்கள் அட்டகாசம்;
By : King 24x7 Website
Update: 2023-12-11 12:24 GMT
பெயிண்ட் கடை ஊழியர் வீட்டில் நகை, பணம், லேப்டாப் திருட்டு - பூட்டை உடைத்து மர்ம நபர்கள் அட்டகாசம்
சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள டி.பெருமாபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (49). இவர் சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள ஒரு பெயிண்ட் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று பழனி முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று விட்டு இன்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 1/2 பவுன் தங்க நகைகள், ரொக்கம் ரூ.69 ஆயிரம் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளைளையடித்து சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபாகரன் இச்சம்பவம் குறித்து வீராணம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.