மோர்பாளையம் பைரவா மூர்த்தி கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
பைரவ நாத மூர்த்தி கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.
மோர்பாளையத்தில் பழமை வாய்ந்த பைரவநாத மூர்த்தி கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது. மல்லசமுத்திரம் அருகே உள்ள, மோர்பாளையத்தில் சுமார் 400ஆண்டுகள் பழமை வாய்ந்த பைரவநாத மூர்த்தி கோவில் உள்ளது. சனி, ராகு, கேது, பைரவர் தோஷங்கள் விலகும் கோவிலாக உள்ளது. வருடம் தோறும் வருகின்ற கார்த்திகை முதல் அஷ்டமி பைரவர் ஜெயந்தி விழாவாக கொண்டாடுவது வழக்கம்.
அதன்படி நேற்று, இவ்விழா சிறப்பாக நடந்தது. காலை 9மணிக்கு கோ பூஜையும், 10மணிக்கு சொர்ண ஹர்சன பைரவர் மற்றும் மகாலட்சுமிக்கு யாக பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து, அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நடந்தது. நீர்பூசணி, தேங்காய் உள்ளிட்டவற்றில் நெய்விளக்கு ஏற்றி பெண்கள் வழிபட்டனர். 12மணிக்கு உற்சவமூர்த்தி அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் கோவிலை சுற்றி வலம் வந்தார். திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஜாதகங்கள் சுவாமியின் பாதத்தில் வைத்து விரைவில் திருமணம் ஆகவேண்டி பூஜை செய்து தரப்பட்டது.
Uசேலம், ஈரோடு, கரூர், மதுரை, காரைக்கால், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, ஒருங்கிணைப்பாளர் திருமலைக்கண்ணன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.