தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா !! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...

Update: 2024-05-07 11:04 GMT

 சித்திரை திருவிழா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

புகழ்பெற்ற தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழா இன்று தொடங்கியது. இதையடுத்து, ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து உள்ளனர்.

தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற தேனி வீரபாண்டி அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடி ஏற்றம் என்ற கம்பம் நடும் விழா சென்ற மாதம் 17ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு உகந்த வேப்ப இலை மற்றும் மஞ்சள் கலந்த புனித நீரை கொடிகம்பத்தில் ஊற்றி கெளமாரி அம்மனை வழிபட்டனர்.

தேனி மாவட்டம் வீரபாண்டியில் அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. மதுரையை ஆண்ட வீரபாண்டிய மன்னரால் கட்டப்பட்ட இக்கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரிசித்தி பெற்றது.

அதனைத்தொடர்ந்து சித்திரை திருவிழா இன்று கோலகலமாக துவங்கியது. மே 14ம் தேதி வரை எட்டு நாட்கள் நடக்கும் இரவு பகலாக இத்திருவிழாவில், பக்தர்கள் முல்லைப் பெரியாற்றில் நீராடி மேள தாளங்களுடன் அக்னி சட்டி எடுத்தல், ஆயிரம் கண் பானை சமர்ப்பித்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக் கடனகளை செலுத்தி வருகின்றனர்.

பக்தர்களுக்கான பேருந்து போக்குவரத்து, மருத்துவம், சுகாதாரம், கழிவறை, குடிநீர் வசதிகளோடு அவசர சிகிச்சைக்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

விழாவின் சிறப்பு நிகழ்வாக மே 10ம் தேதி நடக்கும் திருத்தேர் ஊர்வலத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சஜீவனா உத்தரவிட்டுள்ளார்.

விழாவிற்கு வரும் பக்தர்களுக்காக உணவுப் பொருட்களில் துவங்கி, ராட்டினங்கள் ஆகிய பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

விழா ஏற்பாடுகளை தேனி மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை, வீரபாண்டி பேரூராட்சி, காவல் துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் செய்து உள்ளனர்.

Tags:    

Similar News