வணிகர்களுக்கும் அரசுக்கும் இடையே இடைத்தரகர்கள் கிடையாது - மு.க.ஸ்டாலின்

Update: 2024-07-23 06:10 GMT

 ஸ்டாலின்

வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்க முன்வர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் முதல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியபோது, கலைஞரால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு வணிகர் நல வாரியம் தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வணிகர்களை ஊக்குவிக்கவும், அவர்களது இன்னல்களை குறைக்கவும் 1989ல் நல வாரியம் உருவானது.

Advertisement

வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை 30 ஆக திமுக அரசு உயர்த்தியது. 40,000-க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் இணைந்துள்ளனர்.

வணிகர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை அதிகரித்துள்ளது. வணிகர் நல வாரியத்தின் மூலம் வணிகர்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. வணிகர்களுக்காக ரூ .3.29 கோடி நிதி வழங்கியுள்ளோம்.

நலிவுற்ற வணிகர்களுக்கு பெட்டிக்கடை அல்லது 3 சக்கர வாகனம் வழங்க ரூ.10000 வழங்கப்படுகிறது.

வணிகர்களுக்கும் அரசுக்கும் இடையே இடைத்தரகர்கள் கிடையாது. தமிழில் பெயர் பலகை வைக்க வணிகர்கள் முன் வரவேண்டும்.

வணிகர் நலவாரிய உறுப்பினர்கள் மரணமடைந்தால் வழங்கப்படும் நிதி ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.'' எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News