பழைய சட்டக் கல்லூரி அருகில் கட்டிடம் கட்ட நாளை அடிக்கல் நாட்ட தடையில்லை
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பழைய சட்டக் கல்லூரி அருகில் ஐந்து மாடி கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதிய கட்டடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த வழக்கறிஞர் மோகன் வழக்கு தொடர்ந்து இருந்தார். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பழைய சட்டக் கல்லூரி அருகில் ஐந்து மாடி கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை நாளை நடத்த தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உயர் நீதிமன்ற வளாகத்தில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து மாஸ்டர் பிளான் வகுக்க வேண்டும் என்று மனுதாரர் சார்பில் வாதம் செய்யப்பட்டது. பழைய சட்டக் கல்லூரியை இடிக்கப்படாது. அதன் அருகில் தான் ஐந்து மாடி கட்டடம் அமையப் போகிறது என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் வாதம் செய்துள்ளது.
சட்டக் கல்லூரி வளாகத்தில் இருந்த இரு சமாதிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல் முறையீட்டு வழக்குடன், இந்த வழக்கையும் சேர்த்து பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து மத முறைப்படி அடிக்கல் நாட்டு விழா நடத்த கோரி திராவிடர் கழகம் தரப்பு முறையீடு சென்னை உயர் நீதிமன்றம் நிராகரிப்பு.