அரசு நிலத்தில் குடியேற முயன்ற மக்களால் பரபரப்பு
அரசு நிலத்தில் குடியேற முயன்ற மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-16 11:30 GMT
அரசு நிலத்தில் குடியேற முயன்றவர்கள்
சேலம் அருகே உள்ள பள்ளிப்பட்டி பகுதியில் 2 ஏக்கரில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. நேற்று முன்தினம் அந்த பகுதியை சேர்ந்த 70-க்கும் மேற்பட்டவர்கள் அந்த நிலத்துக்கு சென்று குடிசை போட்டு குடியேற முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வீராணம் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அரசுக்கு சொந்தமான இடத்தில் அனுமதி இல்லாமல் குடியேறுவது சட்டப்படி தவறு என்று எடுத்து கூறினர்.
இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் அங்கு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.