அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் அறிவிப்பு

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.;

Update: 2024-02-11 11:52 GMT

போராட்ட அறிவிப்பு

தூத்துக்குடி தமிழக முழுவதும் அனல் மின் நிலையங்களில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்களை தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி திமுக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி வடசென்னை மேட்டூர் அனல் மின் நிலையங்கள் முன்பு வரும் திங்கட்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஒப்பந்த தொழிலாளர் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

திமுக அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தமிழக முழுவதும் தூத்துக்குடி மேட்டூர் வடசென்னை உள்ளிட்ட பல்வேறு அனல் மின் நிலையங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரியும் ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என அறிவித்திருந்தது. ஆனால், இதுவரை அந்த அறிவிப்பை திமுக அரசு நிறைவேற்றவில்லை இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனல் மின் நிலையங்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வருகிற திங்கட்கிழமை தூத்துக்குடி மேட்டூர் வடசென்னை திருவண்ணாமலை கிருஷ்ணகிரி உள்ளிட்ட அனல் மின் நிலையங்கள் முன்பு ஆயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்கள் ஒருநாள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஒப்பந்த தொழிலாளர் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

மேலும் தமிழக அரசு வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த அறிவிப்பை வெளியிடாவிட்டால் அனல் மின் நிலையங்களை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் ஒப்பந்த தொழிலாளர் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்

Tags:    

Similar News