திருவண்ணாமலை : கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Update: 2024-05-19 05:46 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் மகா தீப மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். மேலும் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம். மே 22 ஆம் தேதி மாலை 06.47 மணி முதல் மே மாதம் 23 ஆம் தேதி இரவு 07.22 வரை பக்தர்கள் கிரிவலம் செல்ல நல்ல நேரம் என்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.