திருவண்ணாமலையில் விடுதி கட்டணம் பல மடங்கு உயர்வு -பக்தர்கள் அதிர்ச்சி

Update: 2023-11-14 08:16 GMT

திருவண்ணாமலை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கார்த்திகை தீபத்தை ஒட்டி திருவண்ணாமலையில் அதிகப்படியான பக்தர்கள் வருகை புரிவர். அன்றைய தினம் மலையைச்சுற்றி கிரிவலம் நடப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்படும். இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படும். கார்த்திகை தீபத்தில் பங்கேற்க திருவண்ணாமலை நோக்கிப் படையெடுக்கும் பக்தர்கள் தங்குவதற்காக திருவண்ணாமலை பகுதிகளில் பல தங்கும் விடுதிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது திருவண்ணாமலையில் பல்வேறு தங்கும் விடுதிகளில் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. சாதாரண நாட்களில் 1,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய்க்கு கொடுக்கப்படும் அறைகள் வாடகை தற்போது 10 முதல் 15 மடங்கு அதிகரித்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தங்கும் விடுதிகள் சார்பில் அறைகள் புக் செய்யும் தளங்களிலும் குறைந்தது 15 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் என அதிகரித்துள்ளது. வரும் 25, 26 ஆம் தேதிகளில் கார்த்திகை தீபத்தில் பங்கேற்க முன்கூட்டியே அறைகள் புக் செய்ய நினைத்த பக்தர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகை விடுமுறைக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்து, அது தொடர்பாக அரசு ஆய்வுகள் மேற்கொண்ட நிலையில், திருவண்ணாமலையில் தங்கும் விடுதிகளின் இந்த திடீர் வாடகை உயர்வு மீண்டும் பக்தர்களை அதிர வைத்துள்ளது.

Tags:    

Similar News