முதல்வர் நிகழ்ச்சிக்கு சென்ற அரசு வாகனம் மோதி கூலித் தொழிலாளி பலி!

முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்க கான்வாயில் வேகமாக சென்ற அரசு வாகனம் மோதியதில் ஒருவர் பலி;

Update: 2024-02-25 13:45 GMT

தூத்துக்குடி அருகே உள்ள திம்மராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மார்ட்டின் தவமணி. கூலித் தொழிலாளியான இவர் இன்று பிற்பகல் தனது இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மறவன் மடம் அருகே செல்லும்போது சிப்காட்டில் நடைபெற்ற மின்சார கார் தொழிற்சாலை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின், புதுக்கோட்டை அருகே நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.‌

Advertisement

தமிழக முதல்வரின் காரினை பின் தொடர்ந்து நூற்றுக்கணக்கான அரசு வாகனங்கள் சென்றுள்ளன. அதில் தமிழக அரசு பணிக்கு ஓட்டப்பட்ட இன்னோவா கார் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது வேகமாக மோதியது. அதில் தூக்கி எறியப்பட்ட கூலித்தொழிலாளி மார்ட்டின் தவமணி சம்பவ இடத்திலேயே தலையில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.

இதைத் தொடர்ந்து உயிரிழந்த மார்ட்டின் தவமணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் தமிழக முதல்வரின் காண்வாயில் வந்த அரசு வாகனம் மோதி கூலி தொழிலாளி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News