தூத்துக்குடி : மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் பலி

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியில் தெரு விளக்கை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட தூத்துக்குடி மாநகராட்சி மின் ஒப்பந்த பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

Update: 2023-12-25 01:45 GMT

முருகன் 

தூத்துக்குடி மாநகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழை நீர் வடிய துவங்கிய பகுதிகளிள் மின் வினியோகம் மற்றும் தெருவிளக்குகளை சரி செய்யும் பனியில் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் மாநகராட்சி மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் நேற்று  பிற்பகல் கிருஷ்ணராஜபுரம் ஐந்தாவது தெரு பகுதியில் தூத்துக்குடி மாநகராட்சியில் மின் விநியோக பிரிவில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் தூத்துக்குடி அம்பேத்கார் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த முருகன் என்ற ஊழியர் இரும்பு மின்கம்பத்தில் ஏறி மின்கம்பத்தில் உள்ள தெருவிளக்கை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் முருகன் மின்கம்பத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்து தொங்கிக் கொண்டிருந்தார் இதைத்தொடர்ந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் மினவாரிய ஊழியர்கள் மின்கம்பத்தில் தொங்கிக் கொண்டிருந்த முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தூத்துக்குடியில் மின்கம்பத்தில் ஏரி தெரு விளக்கை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மாநகராட்சி மின் ஒப்பந்த ஊழியர் முருகன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News