மதுரையில் கொலை வெறி தாக்குதல் நடத்தி சென்னையில் பதுங்கியவர்கள் கைது

மதுரையில் முக்கிய பிரமுகரை தாக்கிவிட்டு சென்னையில் பதுங்கி இருந்த ரவுடிகள் உட்பட ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.;

Update: 2024-03-22 16:57 GMT

மருது சேனை தலைவர் 

மதுரையில் முக்கிய பிரமுகரை கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு சென்னையில் பதுங்கி இருந்த பிரபல ரவுடிகள் கைதாகினர். மதுரையைச் சேர்ந்த ரவுடிகளுக்கு உதவி புரிந்த சென்னையைச் சேர்ந்த 4 ரவுடிகள் என ஆறு ரவுடிகளும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 14ஆம் தேதி மதுரையில் மருது சேனை நிர்வாகியான ஆதிநாராயணன் என்பவர் மீது ஒரு கும்பல் பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து மதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். சென்னை சேப்பாக்கத்தில் தங்கி இருந்த ரவுடிகள் குறித்து மதுரை போலீசார் சென்னை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

Advertisement

இதன் பேரில் சேப்பாக்கத்தில் தனியார் விடுதி ஒன்றில் தங்கி இருந்த ஆறு ரவுடிகளை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். ஆதிநாராயணன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி விட்டு சேப்பாக்கத்தில் தங்கி இருந்த மதுரையைச் சேர்ந்த அப்துல் மஜீத், மாடசாமி ஆகிய இரண்டு முக்கிய குற்றவாளிகளையும் அவர்களுக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்து உதவி புரிந்த ரோகித், நியாஸ், சாய் குமார்,

பூபதி ஆகிய நான்கு ரவுடிகளையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆறு ரவுடிகளையும் சென்னை போலீசார், மதுரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட நான்கு பேரும் கொடுத்த வாக்குமூலத்தில் தாங்கள் பெட்ரோல் குண்டு வீசியபோது ஆதிநாராயணன் தரப்பினர்.

துப்பாக்கியால் சுட்டதாகவும் அதனால் தான் இரண்டாவது பெட்ரோல் குண்டு வெடிப்பதற்கு முன்பே கைதவறி கீழே விழுந்ததாகவும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News