திமிரி: 2 பேரிடம் ரூ.2 .93 லட்சம் பணம் பறிமுதல்!
அரக்கோணம் தொகுதியில் ஆவணங்களின்றி இருவருக்கும் சென்ற பணம் 2.93 லட்சம் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.;
Update: 2024-04-04 15:43 GMT
பணம் பறிமுதல்
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த விளாப்பாக்கம் அருகே காவனூர்- ஆற்காடு சாலையில் பாண்டியன் தலைமையிலான நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1,27,700 எடுத்து சென்றது தெரிய வந்தது. விசாரணையில் காரில் வந்தவர் சென்னையை சேர்ந்த பிரபாவதி (வயது 48) என்பது தெரிய வந்தது. அவர் சேமிப்பு பணத்தை சென்னைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். உரிய ஆவணங்கள் இல்லாததால் நிலை கண்காணிப்பு குழுவினர் பணத்தை பறிமுதல் செய்து, ஆற்காடு தாசில்தார் அருள்செல்வத்திடம் ஒப்படைத்தனர். அதேபோல் திமிரியை அடுத்த சலமநத்தம் சோதனை சாவடியில் தியாகராஜன் தலைமையிலான நிலை கண்காணிப்பு குழுவினர் அந்தவழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மோகன் என்பவரை சோதனை செய்ததில் அவர் ரூ.1 லட்சத்து 66 ஆயிரம் எடுத்து சென்றது தெரிய வந்தது. உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனர்.