திருச்செந்தூரில் 100 அடிக்கு உள்வாங்கிய கடல்

திருச்செந்தூரில் கடல் திடீரென உள்வாங்கியுள்ள நிலையில், பக்தர்கள் கடலில் இறங்க வேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-05-09 12:08 GMT

கடல் உள்வாங்கியது

தென் தமிழக கடற்கரை, கேரளா உள்ளிட்ட கடலோரங்களில் கள்ளக் கடல் நிகழ்வால் கடந்த சில தினங்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதன் காரணமாக கன்னியாகுமரி உள்ளிட்ட ஒருசில கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், திருச்செந்தூர் கடல் திடீரென சுமார் 100 அடி தூரம் உள்வாங்கியுள்ளது. அப்போது சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்த பக்தர்கள், ஆபத்தை உணராமல் கடலில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்து வந்தனர்.

இதையடுத்து, பக்தர்கள் கடலில் இறங்க வேண்டாம் என காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். திருச்செந்தூர் கடலில் கடந்த 5-ந்தேதி கள்ளக்கடல் நிகழ்வு காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News