தமிழக காங்., வேட்பாளர் பட்டியல் நான்கு நாட்களில் வெளியிடப்படும்

தமிழக காங்., வேட்பாளர் பட்டியல் மூன்று அல்லது நான்கு நாட்களில் வெளியிடப்படும் என அதன், மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

Update: 2024-03-13 14:23 GMT

தமிழக காங்., வேட்பாளர் பட்டியல் மூன்று அல்லது நான்கு நாட்களில் வெளியிடப்படும் என அதன், மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார். 

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை கூடுதல் கட்டிடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.இதில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் , தமிழக காங்கிரஸ் மூத்த தலைவருமான EVKS இளங்கோவன் கலந்து கொண்டார்.பின்னர் செய்தாளர்களை சந்தித்த EVKS இளங்கோவன் , மோடி சர்வாதிகாரியாக செயல்பட்டு வருவதாகவும் , எப்படியும் தமிழக மக்களை மயக்கி அவர்களிடம் வாக்குகளைப் பெற்று எப்படியாவது பாஜகவுக்கு தமிழகத்தில் டெபாசிட் ஆவது வாங்க வேண்டும் என்று நினைத்து அடிக்கடி தமிழகம் வந்து சென்று கொண்டிருக்கிறார் என்றார்.

தமிழகத்தின் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று டெபாசிட் வாங்கினால் பிரதமராக ஏற்றுக்கொள்கிறேன் என்றார் CAA சட்டம் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு தூக்கி எறியப்படும் என்றும் , காங்கிரஸ் இரண்டு வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாகவும் , தமிழகத்தை பொறுத்தவரை மூன்று அல்லது நான்கு நாட்களில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றார். நடிகை குஷ்புக்கு பிச்சை எடுப்பதில் ஆர்வம் உள்ளதால் விரைவில் பிச்சை எடுக்கும் நிலைமை வரும் என்ற EVKS தமிழகத்தில் திமுக வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது என்றும் தமிழகத்தில் பாஜகவினர் டெபாசிட் வாங்கினாலே பெரிய விஷயம் என்றார்.

Tags:    

Similar News