தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறையாக அறிவிப்பு: தமிழக அரசு
தீபாவளிக்கு மறுநாளான நவ.1-ந்தேதி அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்க அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து இருந்தனர். நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்தால், தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் தீபாவளிக்கு மறுநாளான நவ.1-ந்தேதி அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலங்கள், கல்வி நிறுவனங்களுக்கு நவ.1-ந்தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனை கருத்தில் கொண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக 9-ந்தேதி அன்று வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினர் கோரிக்கையை ஏற்று விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.