5 பேர் உயிரிழப்பு; தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது: எல்.முருகன்

விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-10-07 06:42 GMT

மத்திய அமைச்சர் எல்.முருகன்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னை மெரினாவில் நேற்று நடந்த விமான சாகசத்தை காண லட்சக்கணக்கானோர் திரண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு அனைத்து கட்சிகளும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் வருந்தத்தக்கது. விமானப்படை அதிகாரிகள் சொன்னதைப்போல் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தவறிவிட்டது. தமிழக காவல்துறை முறையான ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை. சரியான ஏற்பாடுகளை மேற்கொள்ளாததால் இதுபோன்ற விளைவு ஏற்பட்டுள்ளது.  தமிழக அரசால் சமாளிக்க முடியவில்லை என்பதை தெரிவித்த கனிமொழி பதிவை வரவேற்கிறேன் என்று கூறினார்.

Tags:    

Similar News