திருச்சியில் சாரணர் இயக்க வைர விழா; தமிழக அரசு ரூ.39 கோடி ஒதுக்கி அரசாணை!!
திருச்சியில் ஜனவரி மாதம் நடைபெற உள்ள சாரணர் இயக்கத்தின் தேசிய அளவிலான வைர விழாவிற்கு தமிழக அரசு ரூ.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
திருச்சியில் ஜனவரி மாதம் நடைபெற உள்ள சாரணர் இயக்கத்தின் தேசிய அளவிலான வைர விழாவிற்கு தமிழக அரசு ரூ.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி வெளியிட்ட அரசாணையில், பாரத சாரணர் இயக்குனரகத்தின் வைர விழா 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தமிழக அரசால் நடத்தப்பட உள்ளது. இந்த விழா 7 நாட்கள் நடைபெறும். இதில் இசைக்குழு அணிவகுப்பு, வண்ணமிகு அணிவகுப்பு, உடல் திறன் வெளிப்பாடு, நாட்டுப்புற நடனம், உணவுத் திருவிழா, சாகச நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. விழாவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். விழாவை சிறப்பாக நடத்துவதற்கு ரூ.39 கோடியே 7 லட்சத்து 75 ஆயிரம் நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.