கூட்டுறவு பொங்கல் - குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள்: தமிழக அரசு

பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொதுமக்களுக்கு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பொங்கல் தொகுப்பு விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-12-13 08:46 GMT

Tn govt

பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொதுமக்களுக்கு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பொங்கல் தொகுப்பு விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொங்கல் தொகுப்பு ரூ.199-க்கும், சிறப்பு பொங்கல் தொகுப்பு ரூ.499-க்கும், பெரும் பொங்கல் தொகுப்பு ரூ.999-க்கும் விற்க உத்தரவிட்டுள்ளது. பச்சரிசி, பாகுவெல்லம் அரைகிலோ, பாசிபருப்பு 100 கிராம், ஏலக்காய் 5 கிராம், முந்திரி, ஆவின் நெய் 50 கிராம் பரிசு தொகுப்பில் வழங்கப்பட உள்ளது. கூட்டுறவு மொத்த பண்டக சாலைகள், பிரதம மந்திரி கூட்டுறவு பண்டக சாலைகளில் பரிசு தொகுப்பு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு விற்பனை சங்கம், சில்லரை விற்பனை நிலையங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

Tags:    

Similar News