தமிழகத்தில் காலியாக உள்ள 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு!!

தமிழகத்தில் காலியாக உள்ள 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-12-20 06:36 GMT

Tn govt

தமிழகத்தில் காலியாக உள்ள 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்கு மாதம் 3 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: தமிழ்நாட்டில் சத்துணவு திட்டத்தினை சீரிய முறையில் செயல்படுத்திட தற்போது காலியாகவுள்ள மொத்த பணியிடங்களில், அவசர அவசியம் கருதி 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை மட்டும் மாதம் ரூ.3,000 வீதம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட உரிய ஆணை வழங்குமாறு சமூக நல ஆணையர் அரசை கேட்டுக் கொண்டுள்ளார். இதை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து, காலியாகவுள்ள 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை மட்டும் ரூ.3 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் நவம்பர் 2024 முதல் பிப்ரவரி 2025 வரையிலான 4 மாதங்களுக்கான தொகை ரூ.10 கோடியே 79 லட்சத்து, 64 ஆயிரம் ஒப்பளிப்பும் செய்து ஆணையிடுகிறது. தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படும் பணியாளர்களுள் 12 மாதங்கள் திருப்திகரமாக பணியினை முடிக்கும் தகுதியான பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் நிலை-1 ரூ.3 ஆயிரம் முதல் ரூ.9,000 வழங்கப்பட வேண்டும். தொகுப்பூதிய சமையல் உதவியாளர் பணி நியமனத்திற்கு குறைந்தபட்ச கல்வி தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி என நிர்ணயம் செய்யப்படுகிறது. சென்னை மாவட்டத்தில் சமையல் உதவியாளர்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட இணை இயக்குநர் நியமன அலுவலராக நியமனம் செய்யப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு மாற்றுத் திறனாளிகளை நியமனம் செய்வதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News