இன்று அனுமன் ஜெயந்தி!

இன்று மார்கழி அமாவாஸ்யையுடன் கூடிய மூல நக்ஷத்திரம் ஶ்ரீஹனுமத் ஜெயந்தி.

Update: 2024-01-11 01:16 GMT

இன்று அனுமன் ஜெயந்தி! 

இன்று மார்கழி அமாவாஸ்யையுடன் கூடிய மூல நக்ஷத்திரம் ஶ்ரீஹனுமத் ஜெயந்தி-11.01.2024

ஶ்ரீராமர் பூமியில் அவதரித்த காரணங்கள் நிறைவேறிவிட்டன! ராமருடன் வந்த லக்ஷ்மணன் தன் இருப்பிடம் சேர்ந்து விட்டான்! சீதா தேவியாக அவதரித்த லக்ஷ்மியோ, ராமருக்கு முன்பாகவே வைகுண்டம் சென்று காத்திருக்கிறாள்! ஆனாலும் ஶ்ரீராமனால், அவர் விருப்பப்படி ஆவதார நோக்கம் முடிந்தும் செல்ல முடியவில்லை, காரணம்? சாக்ஷாத் ஹனுமனே! ஹனுமன் எப்போதும் ஶ்ரீராமருடைய அருகிலேயே இருந்து கைங்கர்யம் செய்து வந்தான்! ஒரு வழியாக பகவான் ஶ்ரீராமர் ஹனுமனிடம் விடைபெற எண்ணினார். ஹனுமனை அழைத்து, உனக்கு ஒரு உரிமை தருகிறேன். உனக்கு விருப்பமானால் நான் இப்பூமியில் இருந்து செல்லும்போது நீயும் என்னுடன் வரலாம் என்றார்!

ஹனுமன் உடல் சிலிர்த்தான், உள்ளம் நெகிழ்ந்தான் - ஒருகணம் யோசித்தான், பிரபு! தாங்கள் என்னையும் வைகுந்தம் அழைத்தமைக்கு நன்றி. ஆனால் ஒரு விளக்கம் மட்டும் கூறுங்கள் என்றான். வைகுண்டத்தில் நீங்கள் ராமனாக, என் பிரபுவாக இருப்பீர்களா? இல்லை அவதார புருஷன், விஷ்ணுவாக சேவை சாதிப்பீர்களா? என்று ஹனுமன் கேட்டான். ஒரு நிமிஷம் திகைத்த ஶ்ரீராமர், என்ன சந்தேகம் ஹனுமனே! வைகுண்டத்தில் நாம் பகவான் விஷ்ணுவாகவும், சீதை லக்ஷ்மி தேவியாகவும், லக்ஷ்மணன் ஆதிசேஷனாகவும், பரத-சத்ருக்னன் சங்கு- சக்கரமாகவும் அவதாரத்தில் இருப்போம் என்றார் ஶ்ரீராமர்! ஹனுமனோ தயக்கமின்றி பிரபு, எனக்கு ஶ்ரீராமன் போதும். உங்களை ராமனாகவும், அன்னையை சீதாபிராட்டியாகவும், மற்றவர்களை இப்புவியில் எடுத்த அவதாரங்களாகவே வணங்க விரும்புகிறேன்!*

நான் பூமியில் இருந்து உங்கள் நாமத்தை ஜபித்துக் கொண்டே இருப்பேன்! உங்கள் நாமத்தை பிறர் ஜெபிப்பதை கேட்டபடியே இருப்பேன்! எனக்கு அந்த புண்ய நிலையை தந்தருளினால், அதுவே போதும் என்றான் ஹனுமன்! பகவான் ஶ்ரீராமர், ஹனுமனின் பக்தியை மெச்சி, அவ்வாறே ஆசி வழங்கினார்!! "அஸாத்யம் ஸாதகஸ்வாமின் அஸாத்யம் தயஹிம்வத: இராமதூத| க்ருபாஸிந்தோ: மத்கார்யம் ஸாதயப்ரபோ:|| - ஹனுமனே! சாதிக்க முடியாததை சாதித்துக்கொடு! உன்னால் செய்ய முடியாதது என்று எதுவுமில்லை!! கருணையுள்ளம் கொண்ட ராமதூதனே, எனது காரியத்தை முடித்துக்கொடு!

Tags:    

Similar News