சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு!!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து கடந்த 8-ந்தேதி வரை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. கடந்த 9-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து, 13, 14-ந்தேதிகளில் சற்று சரிந்தது. அதனைத்தொடர்ந்து 15 மற்றும் 16-ந்தேதிகளில் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில், கடந்த 17-ந்தேதி கொஞ்சம் அதிகரித்து, 18-ந்தேதி மீண்டும் குறைந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினமும் அதன் விலை இறங்குமுகத்தில் காணப்பட்டது. அதை தொடர்ந்து நேற்று மூன்றாவது நாளாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ. 56,320-க்கு விற்பனையானது. இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 56,800-க்கும் கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,100-க்கும் விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு நாட்களாக குறைந்த வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 99 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ.99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்: 20-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,800, 19-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,560, 18-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,200, 17-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,080, 16-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,120. கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்: 20-12-2024- ஒரு கிராம் ரூ. 98, 19-12-2024- ஒரு கிராம் ரூ. 99, 18-12-2024- ஒரு கிராம் ரூ. 100, 17-12-2024- ஒரு கிராம் ரூ. 100, 16-12-2024- ஒரு கிராம் ரூ. ௧௦௦.