சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.61,960க்கு விற்பனை!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.61,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.;

Update: 2025-02-01 06:53 GMT

Gold

ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை உயர்வது பொதுமக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பவுன் ரூ.62 ஆயிரத்தை நெருங்கியதால் வரலாற்றில் முதல் முறையாக தங்கம் விலை உச்சம் தொட்டுள்ளது. இம்மாதத்தில் மட்டும் பவுனுக்கு ரூ.4,760 உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே சர்வதேச சந்தை நிலவரத்தின் படி தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அவ்வப்போது சற்று குறைந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் மீண்டும் அதிகரித்து, கணிக்க முடியாத அளவில் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை கடந்த 22ம் தேதி வரலாற்றில் முதல்முறையாக ரூ.60,000-ஐ கடந்து புதிய உச்சம் தொட்டது. அன்றைய தினம் பவுனுக்கு ரூ.60,200-க்கு விற்பனையாது. அன்று முதல் தங்கம் விலை பவுன் ரூ.60 ஆயிரத்துக்கு கீழ் குறையவில்லை. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,280 வரை உயர்ந்துள்ளது. கடந்த புதன்கிழமை ஒரு பவுனுக்கு ரூ.680ம், வியாழக்கிழமை ரூ.120ம் உயர்ந்து ரூ.60,880க்கு விற்பனையாகி வந்தது. நேற்று (வெள்ளிக்கிழமை) தங்கம் விலை யாரும் எதிர்பாராத அளவில் ஒரு பவுனுக்கு ரூ. 960 ஒரேநாளில் அதிரடியாக உயர்ந்து அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. நேற்று ஒரு கிராம் ரூ.7730க்கும், ஒரு சவரன் ரூ.61,840க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.61,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,745க்கு விற்பனையாகிறது. இம்மாதத்தில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.4,760 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் சாமானியர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. அதே போல சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ.107க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News