தொடர்ந்து 4வது நாளாக தங்கம் விலை சரிவு.. சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.65,800க்கு விற்பனை!!

சென்னையில் அபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.65,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.;

Update: 2025-04-08 04:41 GMT
தொடர்ந்து 4வது நாளாக தங்கம் விலை சரிவு.. சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.65,800க்கு விற்பனை!!

தங்கம் 

  • whatsapp icon

சென்னையில் அபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.65,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து உயர்ந்து வருகிறது. அதிலும் கடந்த மார்ச் மாதம் பெரும்பாலான நாட்கள் தங்கம் விலை தினம், தினம் புதிய உச்சத்தை தொட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 1ம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.68,080 என்ற புதிய உச்சத்தை தொட்டது. தொடர் ஏற்றத்திற்கு பிறகு யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த 4ம் தேதி தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. அன்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,280 குறைந்து ஒரு பவுன் ரூ.67,200க்கு விற்பனையானது. தொடர்ந்து 5ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.720 குறைந்து ஒரு பவுன் ரூ.66,480க்கு விற்பனையானது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.25க்கு குறைந்து ஒரு கிராம் ரூ.8,285க்கும், பவுனுக்கு ரூ.200 குறைந்து, ஒரு பவுன் ரூ.66,280க்கு விற்பனையானது. இதையடுத்து வாரத்தில் முதல் நாளான நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து, கிராம் ரூ.8,285க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து சவரன் ரூ.66,280க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று மேலும் தங்கத்தின் விலை சரிவை கண்டுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.65,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.8,225க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே போல வெள்ளி விலையும் நேற்று குறைந்திருந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.103க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.102க்கு விற்பனையாகிறது.

Tags:    

Similar News