சென்னையில் நாளை அரசு பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னையில் நாளை அரசு பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-02 14:01 GMT
கோப்பு படம்
NMMS எனப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவி தொகை திட்ட தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 35 மையங்களில் என் எம் எம் எஸ் தேர்வு நடைபெற உள்ளதால் 700 ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபட உள்ளனர். மிக்ஜாம் புயல் காரணமாக வழங்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் தொடர்ச்சியாக 4 சனிக்கிழமைகள் பள்ளிகள் நடத்த உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் நாளை சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை.
நாளை பிப்ரவரி 3ஆம் தேதி வழங்கப்படும் விடுமுறையை அடுத்த வாரம் 10 ம் தேதி ஈடு செய்யும் விதமாக பள்ளிகள் செயல்படும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.