குற்றால அருவிகளில் குளிக்க இன்று சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி !!

Update: 2024-05-24 07:34 GMT

குற்றால அருவி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கணிசமாக விழுந்தது. இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி பழைய குற்றாலம் அருவி ஏராளமான சுற்றுலா பயணிகள் குறித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் நெல்லையை சேர்ந்த அஸ்வின் என்ற சிறுவன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்தான். இதனை அடுத்து குற்றாலத்தில் அனைத்து அருவிகளும் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

தொடர்ந்து சில நாட்களாக அருவிகளில் மிதமான அளவிலேயே தண்ணீர் கொட்டினாலும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அருவிகளில் இது போன்ற திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை முன்கூட்டியே அறிந்து சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக வெளியேற தேவையான ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக நேற்று மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் அருவிக்கு நேரடியாக சென்ற ஆய்வு செய்தனர். தொடர்ந்து அருவிகளில் குளிப்பதற்கான தடை உத்தரவு முடிந்து இன்று காலை முதல் மெயின் அருவி தவிர மற்ற அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

மெயின் அருவிகள் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இன்று மாலை முதல் குளிக்க அனுமதி வழங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். குற்றால அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளியலில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு பாதுகாப்பு அம்சமாக கம்பிகள் கொண்ட தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பழைய குற்றாலம் அருவியில் இனி காலை 6 மணி முதல் மாலை 5.30 வரை மட்டுமே குளிக்கனும் எனவும் இரவில் குளிக்க அனுமதி இல்லை எனவும் கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News