3 இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு - போக்குவரத்து பாதிப்பு

குழாய்கள் மீண்டும் உடையாத வகையில் சரிசெய்ய வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்;

Update: 2023-12-12 02:30 GMT

3 இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பால் போக்குவரத்து பாதிப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் சாரதா காலேஜ் ரோட்டில் அழகாபுரம் போலீஸ் நிலையம் எதிரில் கடந்த 15 நாட்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அஸ்தம்பட்டி முதல் 5 ரோடு வரை செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். இந்த நிலையில் இன்று காலை அழகாபுரம் போலீஸ் நிலையம் எதிரில் மாநகராட்சி நிர்வாகத்தினர் குடிநீர் குழாய் உடைப்பை சீர் செய்யும் பணிகளை மேற்கொண்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த இடத்தில் ஆண்டிற்கு 5 முறையாவது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுகிறது . இதனை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு பைப்லைன் மீண்டும் உடையாத வண்ணம் சரி செய்ய வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News