தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

இந்தாண்டில் அக்., 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அக்., 29ம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று துவங்கியது.

Update: 2024-07-01 09:08 GMT

  இந்தாண்டில் அக்., 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அக்., 29ம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று துவங்கியது. 

தீபாவளி பண்டிகைக்கான ரயில் பயணச்சீட்டு முன்பதிவு 120 நாள்களுக்கு முன்பாக தற்போது தொடங்கியுள்ளது. கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடுவார்கள். இதற்கு திட்டமிட்டு சொந்த ஊர்களுக்கு இரயிலில் செல்பவர்கள் டிக்கெட் புக் செய்யும் போது அந்த டிக்கெட்டுகள் வேகமாக விற்று தீர்ந்துவிடும்.

குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கான டிக்கெட்டுகள் வெகு விரைவில் தீர்ந்து விடுகின்றன. அதன்படி அக்டோபர் 29ஆம் தேதிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. மேலும், அக்டோபர் 30 ஆம் தேதிக்கான டிக்கெட் நாளை தொடங்குகிறது. தற்போது, தீபாவளி நாட்களில் 80 சதவீத டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்யப்படுகின்றன. இதற்கிடையில், கடைசி நிமிட ரயில் டிக்கெட் தேவைப்பட்டால், தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.

ஐ.ஆர்.சி.டி.சி செயலியின் மூலம் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய தேவையான அனைத்து சான்றுகளையும் விரைவாக நிரப்புகிறது. பயணிகள் விவரங்களைச் சேமித்தவுடன், தட்கல் சாளரம் திறந்தவுடன் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கான வழிமுறைகளைப் பின்பற்றலாம். இதன் மூலம், தட்கல் டிக்கெட்டை உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் சிரமமின்றி முன்பதிவு செய்யலாம் எனவும் இரயில்வே தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News