உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு பயிற்சி வகுப்பு
நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு 5 நாட்களுக்கான சான்றிதழ் பயிற்சி வகுப்பை சென்னை மாநகராட்சி ஆணையரும் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலருமான ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
Update: 2024-01-30 04:48 GMT
வருகின்ற பாராளுமன்ற தேர்தல் 2024னை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 8 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு 29.01.2024 முதல் 02.02.2024 வரை நடைபெறவுள்ள 5 நாட்களுக்கான சான்றிதழ் பயிற்சி வகுப்பினை சென்னை மாநகராட்சி ஆணையரும் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலருமான ராதாகிருஷ்ணன், தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்தப் பயிற்சி வகுப்பில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) லலிதா, மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) சுரேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.