வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி!
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு அடுத்த வாரம்பயிற்சி தொடங்கும் என தலைமைதேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.
இது குறித்து அவ்ர் கூறியதாவது : வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள்சரியாக மேற்கொள்ளப்பட்டுள் ளன. தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, ஸ்டிராங் அறை முன்பு கூடுதல் கேமரா பொருத்தப்பட்டு, மின்சாரம் தடைபட்டாலும் அந்த கேமரா இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி அடுத்த வாரம் தொடங்கும். அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியாக இல்லாமல், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் பயிற்சிக்கான தேதியை முடிவு செய்வார்கள்.
வாக்கு எண்ணிக்கையின் போது, ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு நுண் பார்வையாளர் நியமிக்கப்படுவார். தேர்தலின்போது பணியாற்றிய மத்திய பார்வையாளர்கள், வாக்கு எண்ணிக்கையின் போதும், கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். மக்களவைதொகுதிக்குட்பட்ட சட்டப்பேரவைதொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையை கவனிக்க தேவைப்படும் இடங்களில், ஐஏஎஸ் அல்லது மாநில அதிகாரிகளை தேர்தல்ஆணையம் கூடுதல் பார்வை யாளர்களாக நியமிக்கும்." என தெரிவித்தார்.