மேலூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்லும் : தகவல்

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் முத்துநகர் மற்றும் மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் 1 நிமிடம் நின்று செல்லும் என்று தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.

Update: 2024-04-03 06:29 GMT

ரயில்

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ஏப்ரல் 2 முதல் 16 வரை ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக பயணிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக தூத்துக்குடி சென்னை எழும்பூர் முத்து நகர் ரயில் (12694), தூத்துக்குடி மைசூர் ரயில் (16235) ஆகியவை ஏப்ரல் 2 முதல் 16 வரையும், மைசூர் - தூத்துக்குடி ரயில் (16236) ஏப்ரல் 2 முதல் 15 வரையும் மேலூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் முத்துநகர் மற்றும் மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் 1 நிமிடம் நின்று செல்லும் என்று அறிவித்துள்ள தெற்கு இரயில்வே நிர்வாகத்திற்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலாளர் பிரம்ம நாயகம், எம்பவர் இந்தியா, நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவத்தின் கெளரவ செயலாளர்  ஆ.சங்கர் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News