கூடுதல் டிஜிபி அருண் இடமாற்றம் - உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுப்பு
அதிகாரிகளின் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஐ.பி.எஸ். அதிகாரி அருணை இடமாற்றம் செய்யும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
Update: 2024-04-19 06:27 GMT
ஐ.பி.எஸ். அதிகாரி அருணை இடமாற்றம் செய்யும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக கூடுதல் டிஜிபி அருண், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு சாதகமாக செயல்படுவார் என்பதால் அவரை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் எஸ்.கே.சாமி வழக்கு தொடர்ந்தார். தேர்தல் ஆணைய கண்காணிப்பில் சம்பந்தப்பட்ட அதிகாரி உள்ளதால், மனுதாரர் எந்த அச்சமும் கொள்ள தேவையில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடைசி நேரத்தில் காவல் துறை அதிகாரியை இடமாற்றம் செய்யும்படி உத்தரவிட முடியாது என வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது . தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.