மாவட்ட வழங்கல் அலுவலர் பணியிட மாற்றம்: தலைமை செயலர் உத்தரவு
தமிழகத்தில் 35 துணை ஆட்சியர்கள் மாவட்ட வருவாய் அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். மேலும் 11 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ;
By : King 24X7 News (B)
Update: 2024-02-18 13:06 GMT
கோப்பு படம்
தமிழகத்தில் 35 துணை ஆட்சியர்கள் மாவட்ட வருவாய் அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். மேலும் 11 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி தூத்துக்குடி மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல் காசிம் பதவி உயர்வு பெற்று மதுரை மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அமுதா சென்னையில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு பால் பொருட்கள் உற்பத்தி பிரிவு பொது மேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதுபோல் தமிழகம் முழுவதும் 35க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.