மணலூர்பேட்டை அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா
மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்;
Update: 2023-12-03 08:05 GMT
மரம் நடும் விழா
மணலுார்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. கள்ளக்குறிச்சி தி.மு.க., மாவட்ட இளைஞரணி சார்பில் மணலுார்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி பூபதி தலைமையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி வரவேற்றார். நகரத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் முதல் கட்டமாக பள்ளி வளாகத்தில் 25 மரக்கன்றுகள் நடப்பட்டது. நகர அவைத் தலைவர் மாணிக்கம், மாவட்ட துணை அமைப்பாளர் சையத்அலி, நகர துணை செயலாளர் சரவணன், நகர துணை அமைப்பாளர்கள் செல்வகணபதி, சுரேஷ், குமார், கார்த்திகேயன், மாவட்ட பிரதிநிதி ராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.