திருக்கோவிலூா் அருகே மரக்கன்று நடும் விழா
உலக மண் தின விழாவை முன்னிட்டு விவசாயிகளுக்கு மரம் நடும் விழா;
Update: 2023-12-09 07:23 GMT
உலக மண் தினம்
உலக மண் தினத்தை முன்னிட்டு திருக்கோவிலுார் அடுத்த தேவனூர்,அய்யனார் விவசாய நிலத்தில் ஈஷா யோகா காவேரி கூக்குரல் அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.விவசாயி பாபு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் விவசாயிகள் பங்கேற்றனர்.விவசாய நிலங்களில் மரக்கன்றுகளை நடுவதன் மூலம் கிடைக்கும் பலன்கள் குறித்து களப்பணியாளர் ரகுநாதன் விளக்கினார்.நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு மகாகனி, சந்தனம் உள்ளிட்ட மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.