படகில் வந்து ஆர்வமுடன் வாக்களித்த மலைவாழ் மக்கள்.
பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட மலை கிராம மக்கள் பேச்சிப்பாறை அணையை படகில் கடந்து வந்து ஆர்வமுடன் வாக்களித்தனர்.
Update: 2024-04-19 08:02 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட தச்சமலை,மாங்கமலை, முடவன்பொற்றை உட்பட 10 க்கும் மேற்பட்ட மலைவாழ்கிராமங்களில் வாழ்ந்துவரும் பழங்குடியின மக்கள் வாக்களிக்க பேச்சிப்பாறை அரசு உண்டு உறைவிடமேல்நிலைபள்ளியில் வாக்குசாவடி மையம் அமைக்கபடுகிறது .
ஒவ்வொரு தேர்தலிலும் இந்த வாக்குசாவடி மையத்திற்கு மலைவாழ்மக்கள் வாக்களிக்க அணையில் படகு மூலம் வந்து வாக்களிப்பது வழக்கம் .இதையடுத்து இன்று நடைபெற்றுவரும் பாராளுமன்ற தேர்தலிலும் மலைவாழ் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவை செய்ய அணையில் படகு மூலம் வந்திறங்கினர்.தொடர்ந்து சுமார் 2 கிலோமீட்டர் நடந்து பேச்சிப்பாறையில் அமைந்துள்ள வாக்குசாவடியில் வந்ததுடன் ஆர்வமுடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.