பாஜக மாநில நிர்வாகி சௌதாமணி கைது

சமூக வலைத்தளத்தில் பள்ளி சிறுமிகள் மது குடிப்பது போன்று வீடியோ வெளியிட்டு அவதூறு பரப்பிய புகாரில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் செளதாமணியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-03-06 13:17 GMT

செளதாமணி

பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் செளதாமணி சமூக வலைத்தளத்தில் பள்ளி சிறுமிகள் மது குடிப்பது போன்று வீடியோ வெளியிட்டு திராவிட மாடல் ஆட்சியில் மதுப்புழக்கம் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக இருப்பதாக கருத்து பதிவிட்டிருந்தார். அவதூறு கருத்து பரப்பிய பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் செளதா மணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி திமுக மத்திய மாவட்ட ஐடி பிரிவினர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதன் பேரில் சௌதாமணியை திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
Tags:    

Similar News