பென்னகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா
பென்னகர் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆண்டு நிறைவு விழா, மூன்று ஆசிரியர்கள் பணி ஓய்வு விழா, பள்ளியின் ஆண்டு விழா என் முப்பெரும் விழா கோலாகலமாக தலைமை ஆசிரியர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.
By : King 24x7 Angel
Update: 2024-02-10 07:16 GMT
ராணிப்பேட்டை மாவட்டம், பென்னகர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளியின் 60 வது ஆண்டு நிறைவு விழா, மூன்று ஆசிரியர்கள் பணி ஓய்வு விழா, பள்ளியின் ஆண்டு விழா என் முப்பெரும் விழா கோலாகலமாக தலைமை ஆசிரியர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே எல் ஈஸ்வரப்பன், முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, திமிரி ஒன்றிய பெருந்தலைவர் அஷொக் ஆகியோர் கலந்து கொண்டனர். முதலாவதாக நாட்டுப்புற பறை இசை பாடல் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வுடன் செய்யப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் பரதநாட்டியம், போக் டான்ஸ், பிரமிட் சாகசம் உள்ளிட்ட பல திறமைகளை பள்ளி மாணவர்கள் காட்டினர். தொடர்ந்து அரசு விலையில்லா மிதி வண்டியினை மாணவர்களுக்கு எம் எல் ஏ வழங்கினார். இதில் பேசிய எம் எல் ஏ ஜே எல் ஈஸ்வரப்பன், மாணவர்களின் மிகப் பெரிய சொத்தே கல்வி தான் கலவி கற்றவர்க்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு என்பது போல இன்றைக்கு பெரிய பதவியில் உள்ளவர்கள் அனைவரும் விடியற்காலை எழுந்து தியானம் செய்து படித்தவர்களே என மாணவர்களுக்கு சுட்டி காட்டினார். அதனால் நன்றாக படித்து நமது நாட்டுக்கும், நமது பள்ளிக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என பேசினார். அதேபோல் சிறப்பாக கலை நிகழ்ச்சியில் தங்களது திறமைகளை காட்டிய மாணவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் உஷா மெடல் போட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார். இதில் ஒன்றிய குழு உறுப்பினர் ஜீவாகுப்பன், ஊராட்சி மன்ற தலைவர் லதா வெங்கடேசன், எஸ் எம் சி கல்விக் குழு கல்வியாளர் கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் சமூக ஆர்வலர் அம்பேத்கர், முன்னாள் மாணவர் டில்லி கணேஷ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.