ஜெயராணி மகளிர் பள்ளியில் முப்பெரும் கண்காட்சி
பல மாணவர்கள் ஆர்முடன் பங்கேற்றனர்;
Update: 2023-12-03 03:37 GMT
ஜெயராணி மகளிர் பள்ளியில் முப்பெரும் கண்காட்சி
சேலம் நெத்திமேடு ஜெயராணி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் கண்காட்சி நடைபெற்றாது. பள்ளி தலைமை ஆசிரியை இசபெல் வரவேற்றார். சேலம் அம்மாப்பேட்டை ஹோலி கிராஸ் மெட்ரிக் பள்ளி முதல்வர் சேசுராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கண்காட்சியை திறந்து வைத்தார். இந்த கண்காட்சியில் பழமையான வரலாற்று நாணயங்கள், அஞ்சல் தலைகள், சேலம் வரலாற்று சின்னங்களின் பட தொகுப்புகள், ஓவியங்கள், மாணவிகளின் அறிவியல் படைப்புகள் இடம் பெற்றிருந்தன. இக்கண்காட்சியை ஜெயராணி மகளிர் பள்ளி, ஜெயராணி மெட்ரிக் பள்ளி, ஜெயராணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சேலம் குகை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, செவ்வாய்ப்பேட்டை புனித பத்ரீசியார் பெண்கள் தொடக்கப்பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கண்டுகளித்தனர். இதில் சேலம் பாராமகால் நாணய சங்க இயக்குனர் சம்சுதீன் என்கிற சுல்தானா, சேலம் வரலாற்று சங்க பொருளாளர் பர்னபாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.