மினி வேன் மீது லாரி மோதல்
அரியலூர் மாவட்டம் ,ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் வேன் மினி லாரி மோதிய விபத்தில் 9பேர் காயமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெயங்கொண்டம் அருகே குவாகம் கிராமத்திலிருந்து ஆயுதகளம் கிராமத்திற்கு பெண் அழைத்து வருவதற்காக மகேந்திரா வேன் மூலம் குவாகத்தில் இருந்து ஆயுதங்களம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். வேனை வாரியங்காவல் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் மகன் சூர்யா(23) என்பவர் ஓட்டி சென்றார். .இந்நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு செல்லும்போது ஜெயங்கொண்டம் 4 ரோட்டை கடக்க முயன்ற போது திருப்பத்தூர் மாவட்டம், விலகல்நத்தத்திலிருந்து கும்பகோணம் மார்க்கெட்டுக்கு மாங்காய் ஏற்றிவந்த மகேந்திரா பிக்கப் மினி லாரி மோதியதில் வேனில் இருந்த 9 நபர்களுக்கு காயமடைந்தனர்.
இதில் குவாகம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் மனைவி முத்தம்மாள்(60) என்பவருக்கு முகம், கை, காலில் காயம் ஏற்பட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் அனைவரும் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு காய்கறி ஏற்றி சென்ற மினி லாரி ஓட்டி வந்த செய்து திருப்பத்தூர் மாவட்டம் விலகல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் மகன் சௌந்தர்ராஜன் (23) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் உயர்மட்ட மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த நிலையில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டது. இருப்பினும் அந்த மின் விளக்குகள் அதிக வெளிச்சம் இல்லாமலும், உயரம் இல்லாமலும் அமைக்கப்பட்டது. நான்கு ரோட்டில் நான்கு திசைகளில் இருந்தும் வரும் வாகனங்கள் ஒருவருக்கு ஒருவர் வருவது தெரியாமல் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துக்குள்ளாகி மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே உயிர் பலி ஏற்படும் முன்பு ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் உயர்மட்ட மின் கோபுர விளக்கு அதிக வெளிச்சத்துடன் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் பொதுமக்களும் வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு முன்பிருந்த மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதியிடம் இது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.மேலும் ஜெயங்கொண்டம் விருத்தாச்சலம் ரோட்டில் வேகத்தடையும் திருச்சி சாலையில் வேகத்தடையும் சிதம்பரம் சாலையில் வேகத்தடையும் அமைப்பதுடன் ஒளிரும் விள்ளைகள் ஒட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.