அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த டிடிவி தினகரன்.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவரும் அன்புச் சகோதரருமான அண்ணாமலைக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என டி டி வி தினகரன் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.;
Update: 2024-06-04 03:05 GMT
டி டி வி தினகரன்
அண்ணாமலை
அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவரும் அன்புச் சகோதரருமான அண்ணாமலைக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடிய துணிச்சல்மிக்க இளம் அரசியல்வாதியான அண்ணாமலை, பூரண உடல் நலத்துடன், நீண்டகாலம் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதோடு, இந்த பிறந்தநாள், தங்களது துணிவான முயற்சிகளுக்கு வெற்றியை பரிசாக வழங்கும் நாளாக அமைய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.