தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 7வது நாளாக மின் உற்பத்தி நிறுத்தம்
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கடல் பகுதியில் இருந்து அனல் மின் நிலையத்திற்கு குளிரூட்ட நீர் எடுத்துச் செல்லும் பகுதியில் சாம்பல் கழிவுகள் மழை நீரில் அடித்து வந்து தேங்கியுள்ளதால் அனல் மின் நிலைய மின் உற்பத்தி ஏழாவது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகரில் கடந்த 17 மற்றும் பதினெட்டாம் தேதியில் பெய்த மிக கனமழை மற்றும் குளங்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக தூத்துக்குடி மாநகரமே வெள்ளக்காடானது பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மாநகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின .
இதில் தூத்துக்குடியில் இருந்து செயல்பட்டு வரும் தமிழக அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்திலும் பல்வேறு பகுதிகளில் மழை நீரில் மூழ்கியது இதில் அனல் மின் நிலையத்தில் சுவிச்யார்டு பகுதியில் இருந்த மின்மோட்டார்கள் மழை நீரில் மூழ்கின.
மேலும் அனல்மின் நிலையத்திற்கு கடல் பகுதியில் இருந்து குளிரூட்ட கடல்நீர் எடுத்துச் செல்லும் பகுதியில் டன் கணக்கில் சாம்பல் கழிவுகள் குவிந்து அந்த பாதை முழுவதையும் அடைத்துள்ளது இதன் காரணமாக கடந்த 17ஆம் தேதி இரவு முதல் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி ஐந்து யூனிட்டிகளிலும் நிறுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து மழைநீரை அகற்றும் பணியில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஈடுபட்டனர் தற்போது கடல் நீர் உள்ளே கொண்டு செல்லப்படும் பகுதியில் தேங்கியுள்ள சாம்பல் கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது இதன் காரணமாக ஏழாவது நாளாக அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 1050 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் ஆனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி யை துவங்கவதற்கான நடவடிக்கையில் அனல் மின் நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்