தூத்துக்குடி - திருச்சி இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க கோரிக்கை

தூத்துக்குடி - திருச்சிராப்பள்ளி இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2024-01-05 02:14 GMT

ரயில் 

 தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம்  செயலாளர் மற்றும் தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் மா. பிரமநாயகம், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனு: தூத்துக்குடியில் இருந்து காலை நேரத்தில் மதுரை-திருச்சி -சென்னைக்கு நேரடி ரயில் கேட்டு பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். மேலும், திருநெல்வேலி- சென்னை வந்தே பாரத் ரயிலுக்கு தூத்துக்குடியில் இருந்து இணைப்பு ரயிலும் கேட்டு வருகிறோம்.

இதை இணைக்கும் முகமாக (வண்டி எண்.  06885 - 06886 - 06887 - 06888) திருச்சி -காரைக்குடி, காரைக்குடி - விருதுநகர்   பகல் நேர ரயிலை, விருதுநகரில் இருந்து சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி சந்திப்பு வழியாக தூத்துக்குடி வரை நீடித்தால், வந்தே பாரத் ரயிலுக்கு இணைப்பு ரயிலாக விருதுநகர் சந்திப்பில்  தூத்துக்குடி, தூத்துக்குடி மேலூர், வாஞ்சி மணியாச்சி சந்திப்பு, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி சந்திப்பு செல்ல, தூத்துக்குடி பயணிகளுக்கு ஒரு  வாய்ப்பாக   இருக்கும். 

  இந்த   ரயிலை  தூத்துக்குடி   வரை நீடித்தால், தூத்துக்குடியில் பிளாட்பாரம் வசதி காலியாக உள்ளது. இந்த ரயிலை நீடிக்கும் போது தூத்துக்குடியில் இந்த ரயில் இரவில் ஐந்து அல்லது ஆறு மணி நேரம் தான் நிற்கும். இதனால், தூத்துக்குடி ரயில்வே நிர்வாகத்திற்கு எந்தவித பணிகளும் தடைபடாது. பொதுமக்களுக்கும் காலை நேரத்தில், தூத்துக்குடியில் இருந்து மேற்கண்ட நகரங்களுக்கு செல்ல வசதியாக இருக்கும்.

ஆதலால், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக வரும் ரயிலை தூத்துக்குடி வரை நீடித்து, தினசரி  "தூத்துக்குடி - திருச்சிராப்பள்ளி இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்" ரயிலாக இயக்க  நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். மேலும், எங்களுக்கு ரயில்வே வாரியத்தால் ஒப்புதல் அளித்துள்ள, தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் இரவு நேர (வாரம் மூன்று முறை) ரயிலையும், பாலக்காடு- திருநெல்வேலி பாலருவி விரைவு ரயிலையும், தூத்துக்குடி வரை நீடிக்க விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேற்படி கோரிக்கைகளை விரைவாக பரிசீலனை செய்து தைப் பொங்கல் திருநாளுக்கு முன் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News