சத்தீஸ்கரில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!!
நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்புபடையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 நக்சலைட்டுகள் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.;
By : King 24x7 Desk
Update: 2024-09-25 07:21 GMT
Naxalite shot dead in an encounter with security forces in Chhattisgarh: Weapons including guns seized
சத்தீஷ்கார் மாநிலம் சுக்மாவில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் பாதுகாப்புப்படை வீரர்களின் உதவியுடன் தனிப்படை போலீசார் சிந்தவாகு அருகே வனப்பகுதியில் நக்சலைட்டுகள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு மறைந்து இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்புபடையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். உடனே பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். இதில் 2 நக்சலைட்டுகள் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.