சாலையோர தடுப்பு சுவரில் டூவீலர் மோதி வாலிபர் பலி

சாலையோர தடுப்பு சுவரில் டூவீலர் மோதியதில் வாலிபர் பலியானர்.;

Update: 2023-11-28 12:57 GMT

கோப்பு படம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஏற்காட்டில் இருந்து 23-வது கிலோமீட்டர் தொலைவில் உள்ள நல்லூர் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் ராமசாமி (21) கூலி தொழிலாளி. இவர் டூவீலரில் ஏற்காட்டிற்கு வந்துள்ளார். அங்குள்ள இடங்களை சுற்றி பார்த்துவிட்டு மோட்டூரில் பழுது நீக்க கொடுத்திருந்த தனது செல்போனை வாங்கிக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது சாலையோர தடுப்பு சுவரில் டூவீலர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். விபத்தை பார்த்த அங்கிருந்தவர்கள் ஏற்காடு போலீசார் மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து அங்கு வந்த அவரது குடும்பத்தினர் அவரது சடலத்தை வீட்டிற்கு எடுத்து சென்று விட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவர்கள் வீட்டிற்கு சென்று ராமசாமி சடலத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News